கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சவுதி அரேபியா ஜெ பேரவை சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

சவுதி அரேபியா ஜெ பேரவை சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை அரபு நாடுகளில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாள் விழா வரும் 24ம் தேதி அதிமுகவினரால் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமின்றி தற்போது கடல் கடந்து அரபு நாடுகளிலும் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சவுதி அரேபியா ஜெ பேரவை சார்பில் பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி தலைமையில் நடக்கிறது. சவுதி அரேபியா பேரவை தலைவர் அன்பு, இணை செயலாளர்கள் கோபிசாந்த், ஜான்பாட்ஷா, ராஜேந்திரன், ராஜன் முன்னிலை வகிக்கின்றனர். துணை செயலாளர் நடராஜா வரவேற்கிறார்.

பேரவை துணை தலைவர் மைதீன், இணை செயலாளர் மனோகரன், முன்னாள் பேரவை இணை செயலாளர் சசிகுமார், ராமர், நவாஸ், சேகர், ஜெகபார்சாதிக் உள்பட பலர் சிறப்புரையாற்றுகின்றனர். ஏற்பாடுகளை சவுதி அரேபியா ஜெ பேரவையினர் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக