எழு'மின்' விழி'மின்'
கடையநல்லூர் சகோதரர்களே .....கவனிப்பீர்...இதை !
கீழான அவரின் செயல் கண்டு
கிழிந்திட்ட மனதாய் வருந்துகிறேன்
பொங்கிய உணர்ச்சி அடக்கி
இம்மடலால் அவரை எச்சரிக்கிறேன்
வாருங்கள் அகம் கழுவி இஸ்லாமிய அழகோடு கூடி...விருப்பம் இல்லையெனில்
மாறுங்கள் இறை நிராகரிப்பு எனும் அழுக்கான மார்க்கம் நாடி......
இப்படிக்கு
அதிகரிக்கிறது....
மின் கட்டணமும்
மின் கட் ரணமும்
அரிதாக கிடைக்கும் பொருளுக்குத்தான்
கட்டணம் அதிகம்,
மின்சாரத்தைப் போல.
அதை தொட்டால்தான் ஷாக்கடிக்கும்
இப்போது 'கட்'டானலே அடிக்கிறது ஷாக்.
மனிதனின் அடிப்படை தேவை
உணவு உடை உறைவிடம்
அதனினும் அடிப்படை தேவை
நம்மவர்களுக்கு மின்சாரம்
சிறியோர்களுக்கு கேம்ஸ் ஆக
இளையோர்களுக்கு செல்போனாக
பெரியோர்களுக்கு சீரியல்களாக
திடீர் திடீரென கோபப் படுகிறது
என் சம்சாரத்தை போலவே மின்சாரமும்
நடந்த ஆட்சி...
சிறுபான்மை ஆட்சி
மின்சாரம் கொடுப்பதில்.
நடக்கும் ஆட்சி...
பெரும்பான்மை ஆட்சி
மின்சாரம் தடுப்பதில்.
"தூ... வெக்கங்கெட்ட வர்களே....
இதுக்கு ஏண்டா
வெள்ளையும் சொள்ளையுமா அலையணும்"
என்று திட்டலாம்...
தமிழக மந்திரிகளின்
தன்மானத்தை
தட்டி எழுப்பலாம்....
என்று நினைத்தேன்
அது சரி....
அது இருந்தா
அவர் எப்படி
இந்த ஆட்சியில்
மந்திரியாகியிருக்க முடியும்.
உணவுப் பழக்கத்திலிருந்து சினிமா வரை
எதை எதையோ காப்பியடிக்கிறோம்
பிற நாட்டிலிருந்து
"நிலையான மின்சாரம் கொடுப்பதெப்படி?"
என்பதை தவிர.
கதர் சட்டைகளே...
காப்பியடிச்சாவது
கடமையை செய்யுங்கள்.
உடல் மனம் சார்ந்த
கடும் புழுக்கத்திலிருந்து
குடிமக்களை காப்பாற்றுங்கள்.
நன்றி - முஜாஸா
------------------------------------------------------
கிழிசல்களைத் தைப்போம்
நாடுகளிடை நடக்கும் பனிப்போர் போல்
நம்மில் தம்மிலும் தீராத சிறு சிறு உரசல்கள்
நாகரீக நயவஞ்சகத்தில் நைந்திட்ட அவைகள்
நம் மானம் புறத்தாக்கும் கிழிசல்கள்
கொள்கையில் ஒற்றுமை
கருத்துகளில் வேற்றுமை
கொண்ட நிலையில் பிடிவாதம்
கீழிறங்கி வராத(து) படி கடும் நீளம்
தனித்துப் பிரிந்த ஆடுகள் போல்
தவிக்கிறது சமுதாயக் கூட்டம்
பிரித்தாளும் சூழ்ச்சி வென்றதில்
பகையோர் போடும் ஆட்டம்
ஆராய்ந்தோம் அனைத்தையுமென்றோம்
வாதத் திறத்தால் வாய்மையைக் கொன்றோம்
அணி அணியாய்ப் பிரிந்தென்ன கண்டோம்....?
அடிப்படை உரிமைகள் தகர்ந்ததை மட்டுமல்லவா
இறுதி அறுவடையாக்கிக் கொண்டோம்.
சொந்தக் கொள்கைகளைத் திணித்தோம்-முரண்
கொண்ட உண்மையைத் தலை துணித்தோம்
பொய்களில் கல்லாவை நிரப்பியது போதும்- இனியேனும்
கல்புகளில் அல்லாவைப் பதிந்திடுவோம் நாமும்
நபிகளின் சுன்னத்தை மேன்மையாய் நாடுவோம்
நன்மைநிறை ஜன்னத்தை நற்செயல்களில் தேடுவோம்
போதும் நம்மிடை இயக்க உருவாக்கங்கள்- கொண்ட
பொதுக் கொள்கையில் முதலில் ஒற்றுமை உருவாக்குங்கள்.
குறுக்கும் நெடுக்குமாய் வளைந்து குணமென்ன கண்டீர்...?- சமூகம்
வெறுக்கும் முன் ஒரு நிலைப்பாட்டில் அடங்குவோம் வாரீர்.
நட்புடன்
அபுஸாயிமா
------------------------------------------------------
கடையநல்லூர் சகோதரர்களே .....கவனிப்பீர்...இதை !
முஸ்லிம் பெயர்தாங்கி
எச்சங்களுக்கோர் எச்சரிக்கை
----------------------------------------------
எமதூரில் சில தினங்களாய்
சில பித்தர்களால் பரபரப்பு
கண்மணி முஹம்மது நபியை
கடும் சொற்களால் இகழ்ந்தனராம்
மேலான லூத் நபி அவர்களை
பைத்தியம் எனப் பழித்தனராம்
சில பித்தர்களால் பரபரப்பு
கண்மணி முஹம்மது நபியை
கடும் சொற்களால் இகழ்ந்தனராம்
மேலான லூத் நபி அவர்களை
பைத்தியம் எனப் பழித்தனராம்
சுய விளம்பர வெள்ளை பூச அவர்கள்
சுண்ணாம்புக் காளவாயில் குளித்தனராம்
கீழான அவரின் செயல் கண்டு
கிழிந்திட்ட மனதாய் வருந்துகிறேன்
பொங்கிய உணர்ச்சி அடக்கி
இம்மடலால் அவரை எச்சரிக்கிறேன்
கொடுங்கோலன் சைத்தானின்
வழித்தோன்றலாய் வந்தவரே....!
கோமானைக் குறைப்படுத்தி
வழித்தோன்றலாய் வந்தவரே....!
கோமானைக் குறைப்படுத்தி
குணமென்ன கண்டீர்கள்...?
சத்தான இஸ்லாமெனும் தோட்டத்தில்
தீதான விஷநீர் பாய்ச்சுவதேன்?
இஸ்லாத்தின் ஆட்சி இங்கிருந்தால்
இச்சமயம் உங்கள் கதி என்னவாகும்...?
பகையோரின் இரும்புப் படைகளையே எதிர்கொண்டோம்.... வென்றோமே ...
உம்போன்றோரின் துரோகத் துரும்புகளை விட்டு வைப்போமா...?
சாக்கடைக்குள் நீந்திக் கொண்டு நாறும் நீங்களா
சத்திய சந்தனத்தின் மணத்தை சந்தேகிப்பது ...?
சுன்னத்தும் ஜன்னத்தும் அறியாத சூனியங்களே நீங்களா
எங்கள் புண்ணிய தங்க நபியின் தரம் உரசிப் பார்ப்பது.....?

இலாஹியும் சலாமும் விளங்கா ஈனர்களே நீங்களா
எங்கள் அலைஹிஸ் ஸலாம்களை அவமதிக்கத் துணிவது...?
உங்கள் பெயர் மட்டும் இஸ்லாமிய அடிப்படையில்
செயல் அனைத்தும் சைத்தானின் அடிச்சுவட்டில்
நிறுத்துங்கள் உங்கள் இழிந்த வீண் செயல்களை
நினைவில் இருத்துங்கள் நாங்கள் பொறுமை காப்பதை
கல்புகளை கழுகுங்கள் இஸ்லாமிய நற்குண நீரெடுத்து ...இல்லையேல்
விலகிக் கொள்ளுங்கள் இஸ்லாமிய நெறியிலிருந்து
உங்கள் பெயர் மட்டும் இஸ்லாமிய அடிப்படையில்
செயல் அனைத்தும் சைத்தானின் அடிச்சுவட்டில்
நிறுத்துங்கள் உங்கள் இழிந்த வீண் செயல்களை
நினைவில் இருத்துங்கள் நாங்கள் பொறுமை காப்பதை
கல்புகளை கழுகுங்கள் இஸ்லாமிய நற்குண நீரெடுத்து ...இல்லையேல்
விலகிக் கொள்ளுங்கள் இஸ்லாமிய நெறியிலிருந்து
வாருங்கள் அகம் கழுவி இஸ்லாமிய அழகோடு கூடி...விருப்பம் இல்லையெனில்
மாறுங்கள் இறை நிராகரிப்பு எனும் அழுக்கான மார்க்கம் நாடி......
இப்படிக்கு
இஸ்லாமிய உணர்ச்சியுடன்
அபுஸாயிமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக