கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 24 ஜூலை, 2011

கடையநல்லூர் தொகுதிக்கு இன்று அமைச்சர் செந்தூர்பாண்டியன் வருகை

தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செந்தூர்பாண்டியன் இன்று (22ம் தேதி) தொகுதிக்கு வருகை தருகிறார். சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுகவினர் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடையநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., செந்தூர்பாண்டியன் புறநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார். ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக செந்தூர்பாண்டியன் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வரும், கட்சியின் பொது செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக சென்னை சென்ற அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
கடந்த 3ம் தேதி தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்ட செந்தூர்பாண்டியன் 4ம் தேதி அதற்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் துறையின் பல்வேறு ஆய்வு பணிகள் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இலாகா தொடர்பான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். தொடர்ந்து கடையநல்லூர் தொகுதிக்கு முதன் முதலாக அமைச்சர் இன்று (22ம் தேதி) மாலை வருகை தருகிறார்.
காலையில் மதுரையில் நடைபெறும் கதர்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தொடர்ந்து திருச்செந்தூருக்கு சென்று சுவாமி வழிபாடு செய்கிறார். இதனை தொடர்ந்து மாலை கடையநல்லூர் தொகுதியில் அமைந்துள்ள அவரது சொந்த ஊரான செங்கோட்டைக்கு வருகை தருகிறார். பதவியேற்றபின் முதன் முதலாக தொகுதிக்கு வருகை தரும் செந்தூர்பாண்டியனுக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஏற்பாடுகளை தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், சாம்பவர் வடகரை டவுன் பஞ்., துணைத் தலைவர் மூர்த்தி, இலஞ்சி சண்முகசுந்தரம், தொகுதி இணை செயலாளர்கள் நடராஜன், எல்ஐசி முருகையா, ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டி, சங்கரபாண்டியன், செல்லப்பன், நகர செயலாளர்கள் கிட்டுராஜா, தங்கவேல், நெல்கட்டும்செவல் ராஜா, வக்கீல் அய்யப்பராஜா, குட்டியப்பா மற்றும் அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக