கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

கடையநல்லூர் பகுதியில் கன மழையால் நெற்பயிர்கள் சேதம் : நிவாரணம் வழங்க கோரிக்கை


கடையநல்லூர் பகுதியில் பெய்த கனமழையினால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார் சாகுபடி நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கிட வேண்டுமென முக்கிய அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் மாலை நேரங்களில் மழை வெளுத்து வாங்கியது. கடந்த 11ம் தேதி மாலை பெய்த மழையின் வேகம் அதிகளவில் காணப்பட்டு ஆங்காங்கே ஆலங்கட்டி மழையாக பெய்ய துவங்கியது. கால்வாய், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையில் கடையநல்லூர், வைரவன்குளம், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேலக்கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் கார் சாகுபடி நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி இருந்தன.

கன மழையினால் அறுவடைக்கு தயராக இருந்த நெற்பயிர்கள் உதிர்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் காணப்பட்டது. இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் கார் சாகுபடி விவசாய நெற்பயிர்கள் மழையினால் சேதமடைந்திருப்பதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு போதுமான விலையில்லாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கண்டறிந்து தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதி வழங்கிட வேண்டுமென முக்கிய அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக