கடையநல்லூர்:மின்வெட்டை சரிக்கட்ட பயன்படுத்தப்படும் இன்வெட்டர்களை கூட சார்ஜ் செய்ய முடியாத நிலைக்கு மின்தடை தொடர்வதால் இன்வெட்டர்களையும் முறையாக பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மின்தடை கடந்த சில நாட்களாக அதிகபட்ச அளவில் காணப்பட்டு வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 8 மணிநேரம் மின்தடை அமல்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த மின்தடை காரணமாக அனைத்து தொழில்களும் முடக்க நிலையை கண்டு வரும் நிலையில் விவசாயிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையில் தமிழகத்தில் காணப்பட்டு வரும் மின்தடையை சரிக்கட்டும் வகையில் பெரும்பாலான வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சுமார் 600 வாட்ஸ் முதல் 800 வாட்ஸ்களுக்கும் அதிகமான திறன் கொண்ட இன்வெட்டர்கள் மற்றும் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுமார் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.30 ஆயிரம் வரை கொடுத்து வாங்கியாவது மின்வெட்டை சமாளித்துக் கொள்ளலாம் என்று நம்பி வாங்கியவர்கள் தற்போது மின்வெட்டால் இன்வெட்டர்களை சார்ஜ் கூட செய்ய முடியாத சூழ்நிலையில் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக