கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

இஸ்லாமியர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மேலப்பாளையத்தில் சைக்கிள் பேரணி

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்களின் வாழ்வுரிமை போராட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


 இஸ்லாமியர்களுக்கு இந்திய அளவில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 3.5 சதவிகித தனி இடஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருநெல்வேலி மாவட்ட கிளை சார்பாக பிப்ரவரி 14-ம் தேதி திருநெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே இஸ்லாமியர்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெறவுள்ளது.


 இந்த போராட்டத்தை விளக்கி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி மாவட்ட தலைவர் யூசுப் அலி தலைமை வகித்தார்.


 மேலாண்மைக் குழுத் தலைவர் எஸ். ஷம்சுல்லுஹா ரஹ்மானி பேரணியைத் தொடங்கி வைத்தார்.


 பேரணி, மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் சந்திப்பில் இருந்து தொடங்கி, ஆசாத் சாலை, அண்ணா வீதி வழியாகச் சென்று ஜின்னா திடலில் நிறைவடைந்தது. பேரணியில் மாவட்ட செயலர் கே.ஏ. செய்யது அலி, நகர தலைவர் எஸ். ரோஸன், நகர செயலர் எஸ்.எம். சிராஜ், நகர பொருளாளர் முஹம்மது நிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக