கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 15 பிப்ரவரி, 2012

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு அளிக்க வலியுறுத்தி நெல்லையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு அளிப்பது, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்துவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நெல்லையில் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் யூசுப்அலி தலைமை வகித்தார். செயலாளர் செய்யதுஅலி முன்னிலை வகித்தார்.மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி பேசும்போது, ""முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளனர். பெரும்பாலானோர் குறைந்த ஊதியம் பெறும் பணியாளராக உள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று மனைவி, மக்களை பிரிந்து கஷ்டப்படுகின்றனர். முஸ்லிம்களின் அவலநிலை குறித்து நீதிபதி ராஜேந்திர சச்சார், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் காங்., அரசு 50 ஆண்டுகளாக முஸ்லிம்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தி வருகிறது. ரங்கநாத் மிஸ்ரா, சச்சார் கமிட்டி அறிக்கைகள் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட பின்பும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு சட்டமாக்கப்படாமல் உள்ளது. முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.


கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்தக்கட்டமாக சென்னையில் போராட்டம் நடக்கும்'' என்றார்.மாவட்ட துணைத்தலைவர் அகமது, துணைச்செயலாளர்கள் அப்துல்காதர், அபுபக்கர், சுலைமான், தொண்டரணி செயலாளர் சுபைர், வர்த்தக அணி செயலாளர் மைதீன், மருத்துவ அணி செயலாளர் மைதீன், மாணவர் அணி செயலாளர் அன்சாரி உட்பட பலர் பேசினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். பெண்கள், குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் நேஷனல் சாகுல் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக