மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் உதயகுமார் 2-ம் இடம் பெற்றார்.
பள்ளிகளிடையேயான மாநில அளவிலான சிலம்பப் போட்டி,திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் மண்டல அளவிலான போட்டிகளில் வென்ற கடையநல்லூர் பள்ளி 10-ம் வகுப்பு மாணவர்கள் இசக்கிராஜ், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 34 கிலோ எடைப் பிரிவில் உதயகுமார் மாநில அளவில் 2-ம் இடம் பெற்றார். அவர்களை பள்ளித் தலைமைஆசிரியை ஆயிஷாள்பீவி, சிலம்பக் கலை பயிற்றுநரும் தமிழாசிரியருமான சண்முகசுந்தரம், உடற்கல்வி ஆசிரியர் செல்வன் உள்ளிட்டோர் பாராட்டினர். இப் பள்ளி மாணவர்கள் பல ஆண்டுகளாக மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணமான சிலம்பக் கலைப் பயிற்றுநர் சண்முகசுந்தரம், உடற்கல்வி ஆசிரியர் செல்வன் ஆகியோரை பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக