பிலிப்பைன்ஸில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 44 பேர் பலியாகினர். ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
அங்குள்ள நெக்ரோஸ் தீவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் காரணமாக குயிகுல்கான் என்ற நகரில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 29 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புக்குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக