கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

மேலப்பாளையத்தில் சமுதாய விழிப்புணர்வு ஷரீஅத் மாநாடு

மேலப்பாளையத்தில் நெல்லை மாவட்ட ஜமா அத்துல் உலமா மற்றும் மேலப்பாளையம் நகர மஜ்லிஸூல் உலமா சார்பில் சமுதாய விழிப்புணர்வு ஷரீஅத் மாநாடு நடந்தது.
மாநாட்டின் துவக்கமாக ஆலிம்களுக்கான கம்ப்யூட்டர் பயிலரங்கம் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. பயிலரங்கிற்கு ஜமாஅத்துல் உலமா ஆசிரியர் முகம்மது இபுறாஹீம் தலைமை வகித்தார். நெல்லை கிழக்கு அரசு காஜி முகம்மது கஸ்ஸாலி, மஜ்லிஸூல் உலமா செயலாளர் அலி ஹூசைன் முன்னிலை வகித்தனர். கோவை அப்துல் அஜீஸ் ஆலிம்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்தார். மஜ்லிஸூல் உலமா துணை செயலாளர் ஜலாலுத்தீன் நன்றி கூறினார்.


இதனையடுத்து மாநாட்டு அரங்கில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மஜ்லிஸூல் உலமா தலைவர் சதக்கத்துல்லா தலைமை வகித்தார். மாவட்ட ஜமாஅத்துல் உலமா துணை தலைவர் பக்ருத்தீன் ஆலிம் முன்னிலை வகித்தார். அம்பை வட்டார ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பீர் முகம்மது வரவேற்றார். உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் ஹதர் அலி துவக்கவுரை ஆற்றினார். சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் அபூதாஹிர் சிறப்புரை ஆற்றினார். புளியங்குடி வட்டார ஜமா அத்துல் உலமா செயலாளர் கலீலுர் ரஹ்மான் நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஆலிம்கள் பங்கேற்ற ஷரீஅத் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜமாஅத்துல் உலமா துணை தலைவர் ஷாஹூல் தலைமை வகித்தார். பொருளாளர் முகம்மது முஹ்யித்தீன் வரவேற்றார். சிந்தனை சரம் ஆசிரியர் பீர் முகம்மது வரவேற்றார். பைஜூல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியர் முகம்மது முஹ்யித்தீன் கருத்துரை வழங்கினார்.


மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜமாஅத்துல் உலமா தலைவர் ஸலாஹூத்தீன் தலைமை வகித்தார். ஷாஹூல் ஹமீது, அபூபக்கர், ஷம்சுல் ஆலம், முஹம்மது ஹபீப் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் "அசத்தியம் அழிந்தே தீரும்' என்ற நூலை தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா பொது செயலாளர் அப்துல் காதிர் வெளியிட, கேலக்ஸி ஆஸ்பத்திரி நெஞ்சக மருத்துவ நிபுணர் மஹ்பூப் சுப்ஹானி, நெல்லை ஷிபா ஆஸ்பத்திரி அதிபர் டாக்டர் முகம்மது ஷாபின், அஸ்ஸாதிக் கல்வி கூட்டமைப்பு தலைவர் இன்ஜினியர் செய்யது அகமது போன்றோர் நூல்களின் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.


காயல்பட்டிணம் மஹ்ழரதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் கலந்தர் மஸ்தான், மாநில ஜமா அத்துல் உலமா துணை செயலாளர் ஹாமித் பக்ரி, கோவை கம்புக்கடை ஜூம்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் அப்துல் அஜீஸ், உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் காஜா முயீனுத்தீன் சிறப்புரை ஆற்றினர்.


மாநாட்டில் காலியாகவுள்ள வக்புபோர்டு தலைமை பதவியை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். கூடன்குளம் அணுமின்நிலையத்தை விரைவாக திறக்க மென்மையான அணுகுமுறையின் மூலம்
அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட ஜமாஅத்துல் உலமா துணை செயலாளர் மீரான் முஹ்யித்தீன் நன்றி கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக