கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவிலில் கோழிக்கறி கடைக்கு தீ வைப்பு

சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை நண்பகலில் கோழிக்கறி கடையொன்றில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. திருநெல்வேலி சரக டிஐஜி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.


 சங்கரன்கோவிலில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2 நாள்களாக பதற்றம் நீடித்தது. இந்தப் பகுதிகளில் வியாழக்கிழமை ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருந்தது.


 இந்நிலையில், பிற்பகல் 2 மணியளவில் ஜெ. மைதீன் என்பவரின் கோழிக்கறிக் கடை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இச் சம்பவம் நடைபெற்ற பகுதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸôர் உடனே அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


 திருநெல்வேலி சரக டிஐஜி வரதராஜு, மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதரி, கோட்டாட்சியர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.


 இதற்கிடையே, சங்கரன்கோவில் காந்திநகர் ஊர்த் தலைவர்கள் குருசாமி, பெருமாள், சுப்பையா, சங்கரன், தங்கவேலு, முத்து, கந்தசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக