கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை

"விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஆட்டோ மற்றும் லோடு ஆட்டோக்களில் அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலிகளும் உண்டாகிறது. இவற்றை கண்காணிக்காமல் போக்குவரத்து துறை அதிகாரிகள் செயல்படுவதால் தொடர்ந்து விபத்து நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சங்கரன்கோவிலில் லோடு ஆட்டோ-அரசு பஸ் மோதலில் 3 பேர் இறந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.

லோடு ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் ஆட்டோவில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் விதிமுறைகளை மீறி தென்காசி, குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆட்டோக்களில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதால் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.


எனவே அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே சமூகநல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக