கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 4 பிப்ரவரி, 2012

உச்சத்தை தொடும் இளநீர் விலை

கடலூர் மாவட்டத்தில் வீசிய புயலில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்த பெரும்பாலான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து இளநீர் வரவழைத்து விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இளநீர் ஒன்றின் விலை இப்போது ரூ.25 வரை விற்கப்படுகிறது.


தானே புயலால் கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் மா,பலா, வாழை, தென்னை, முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன.  
கடலூர், குறிஞ்சிப்பாடி, காட் டுமன்னார்கோவில், கம்மாபுரம், விருத்தாசலம் உள்ளிட்ட ஒன்றியங்களில் விவசாயிகள் அதிக அளவில் தென்னை வளர்த்து வந்தனர்.


பெரும்பாலான தென்னை மரங்கள் புயலில் விழுந்துவிட்டதால், தென்னை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்தள்ளனர். இரு மாதங்களில் கோடைக்காலம் வர உள்ள நிலையில், தென்னை விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்ட இளநீர் இந்த ஆண்டு கோடை தொடங்கும் முன்பே ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நெய்வேலியில் இளநீர் விற்கும் முத்துசாமி கூறுகையில், கடந்த ஆண்டு அருகிலுள்ள குறிஞ்சிப்பாடியிலிருந்து இளநீர் எடுத்துவந்து விற்பனை செய்தேன்.


இப்போது அங்கு இளநீர் கிடைக்காததால், திருச்சியில் இருந்து வரவழைத்து விற்பனை செய்கிறேன். இளநீர் விலையைக்காட்டிலும் போக்குவரத்துக்கான செலவு அதிகமாவதால், விலை உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் உயரும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக