கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

கடையநல்லூரில் மின்வெட்டை கண்டித்து நடந்த இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டத்தில் புகுந்து அதிமுகவினர் போராட்டம்

கடையநல்லூரில் மின் வெட்டை கண்டித்து இந் திய கம்யூனிஸ்ட் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் புகுந்த அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத் தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மின்வெட்டை கண்டித்தும், மின் விநியோகத்தை உடனடியாக சீர் செய்யக்கோரியும், அரசு மருத்துவமனையில் போது மான டாக்டர்களை நியமிக்கக்கோரியும் கடையநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று முன்தினம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் நாரா யணன் தலைமை வகித்தார். பக்கிரிசாமி, மாரியப்பன் முன்னிலை வகித்தனர். 
மாவட்ட செயலாளர் சண்முகவேலு பேசுகையில், ’தமிழக அமைச்சர்கள், முதல்வர் சட்டசபையில் பேசும்போது மேஜையை தட்டுவதில் குறியாக இருக்கின்றனர். 
மக்கள் நலனில் ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபடவில்லை. முரட்டுபெண் கீரை கடைந்தால் பானை உடை யும், கீரை மசியாது என்ற பழமொழியை மேற் கோள் காட்டி பேசினார். 


இதற்கு அதிமுக மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பழனி தலைமையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், நாங்கள் முறையாக அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். முதல்வர் பற்றி பேசுவதாக நீங்கள் கருதினால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதனால் அவர்களுக் குள் வாக்குவாதம் முற்றி யது. இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்ட போலீ சார் இரு கட்சி தொண்டர்களையும் சமாதானப்படுத்தினர். இத னால் மின் வெட்டு கண்டன ஆர்ப்பாட்டம் பாதியில் முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக