கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

கேரளாவுக்கு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு சாலைகளும் சேதமாகும் அவலம்


கடையநல்லூர்: தமிழகத்தில் இருந்து செங் கோட்டை வழியாக கேரளாவுக்கு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் சாலைகளும் சேதமடைகின்றன. 

தமிழக-கேரள மாநிலங் களை இணைக்கும் முக்கிய பகுதியாக செங்கோட்டை விளங்குகிறது. கொல் லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் இர வும், பகலும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக் கும். தினமும் நூற்றுக்கணக் கான லாரிகளில் பால், காய் கறி, பூ, பலசரக்கு பொருட் கள் உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு வைக்கோல், ரேஷன் அரிசி, மணல், கற் பொடி போன்றவை அள வுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது. கனரக வாகனங்களில் 40 டன் வரை பொருட்கள் ஏற்றி செல்லப்படுவதால்
செங் கோட்டை, புளியரை பகுதியில் சாலை முற்றி
லும் சேதமடைந்து வருகிறது. 

வைக்கோல் லாரிகள் அதிக பாரம் ஏற்றி சாலை யை மறித்துக் கொண்டு செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
தற்போது கடையநல்லூர், செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடை துவங்கி உள்ளதால் கேரளாவிலி ருந்து வைக்கோல் வாங்க கேரள வியாபாரிகள் குவிந்து வருகின்றனர்.
இதனால் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வைக்கோல் ஏற்றப்பட்டு கேரளாவை நோக்கி அணிவகுத்து செல்கின்றன. வழி யில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக் கும் போலீசுக்கும் தங்குதடையின்றி மாமூல் வழங்கப்படுவதால் கேள்வி கேட்பாரின்றி பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை அடைத்து கொண்டு காலை முதல் இரவு வரை வைக்கோல் லாரிகள் அணிவகுத்து கேரளாவை நோக்கி செல்கின்றன. 

அத்துடன் கடந்த ஆட்சி காலத்தில் கேரளாவுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட மணல் தற்போது சர்வ சாதாரணமாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் தமிழகத் தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியும் நள்ளிரவு நேரங்களில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆசி யோடு இந்த கடத்தல் மும்முரமாக நடைபெறுகிறது. அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வாகனங்கள் செல்வ தால் சாலை உருக்குலைந்து வருகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
கேரளாவில் இயற்கை வளத்தை பாதுகாக்கவும், சுற்று சூழலை மேம்படுத்தவும் கேரள அரசுடன் அம்மக்களும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து தங்கு தடையின்றி கேரளாவுக்கு மணல் கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள இயற்கை ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக