கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 11 பிப்ரவரி, 2012

ஆட்டை விழுங்கி கொண்டிருந்த மலைப்பாம்பு பிடிபட்டது

வடக்கு காருகுறிச்சியில் ஆட்டை விழுங்கி கொண்டிருந்த 12 அடி நீள மலைப் பாம்பை அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறையினர் பிடித்தனர். வீரவநல்லூர் அருகேயுள்ள வடக்கு காருகுறிச்சியில் கன்னடியன் கால்வாய் கரையில் இருந்து பிரிந்து செல்லும் ஓடையில் நேற்று காலை மலைப் பாம்பு ஒன்று செம்மறி ஆட்டை விழுங்கி கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள், அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய மீட்பு அலுவலர் மயில்ராஜ், தீயணைப்பு வீரர்கள் பூதப்பாண்டி, அருணாசலம், பன்னீர் செல்வம், போஸ், மில்டன் ஜெயகுமார், அய்யசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் மலைப் பாம்பை பிடித்து, அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பிடிப்பட்ட 12 அடி நீளம், 50 கிலோ எடையுள்ள மலைப் பாம்பு மணிமுத்தாறு மலையில் விடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக