மத்திய ரயில்வேயின் புறநகர் வழித்தடத்தில் கடந்த இரண்டு வாரத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த 2285 பேர் பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓசி பயணிகளிடம் இருந்து 10.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். டிக்கெட் எடுக்காமல் பிடிபடுபவர்களிடம் ஸ்மார்ட் கார்டு வாங்கும் படியும் டிக்கெட் பரிசோதகர்கள் கேட்டுக்கொள்கின்றனர். வடாலா, முலுண்ட், குர்லா போன்ற ரயில் நிலையங்களில் அதிக அளவில் பயணிகளிடம் டிக்கெட் சோதனை செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக