கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

நெல்லை பேட்டையில் முஸ்லிம்கள் திடீர் மறியல்

நெல்லை பேட்டையில் நவாப் வாலாஜா பள்ளிவாசல் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு போலீசார் ஆதரவாக செயல்படுவதாக கூறி அப்பகுதி முஸ்லிம்கள் பேட்டை ரோட்டில் கறுப்பு கொடியேற்றி நேற்று மாலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உதவி கமிஷனர் ராமானுஜம்பெருமாள், தாசில்தார் நாராயணன், வருவாய் ஆய்வாளர் இசக்கிமுத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பள்ளிவாசல் சொத்துகளை முறைப்படுத்த கமிட்டி சார்பில் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வருவாய், போலீசார் சட்டரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும். பேட்டை போலீசார் பாரபட்சமின்றி நடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். 

பள்ளிவாசல் கமிட்டி தலைவர் செய்யது ஜமால் முகமது, செயலாளர் காதர்பாட்ஷா, கவுரவ ஆலோசகர் ஹமீது, தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாருக், முன்னாள் மாவட்ட செயலாளர் உஸ்மான், மமக மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக