தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் 14ம் தேதி தமிழகத்தில் வாழ்வுரிமை போராட்டம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து நெல்லையில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலாண்மை குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தாபி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க 2005 மற்றும் 2008ம் ஆகிய ஆண்டுகளில் அமைக்கப்பட்ட கமிட்டிகள் பரிந்துரைத்தும் இதுவரை தனி இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மத்தியில் ஆளும் காங்., அரசு முஸ்லிம்களுக்கு துரோகம் செய்து விட்டது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம். எனினும், கூடுதலாக 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுக்கிறோம்.
மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழகத்தில் வரும் 14ம் தேதி வாழ்வுரிமை போராட்டம் நடத்தப்படுகிறது.
நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன்பு அன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடத்தப்படுகிறது. தவ்ஹீத் ஜமாத்தை பொறுத்தவரை அரசியலில் ஈடுபடும் எண்ணம் ஏதும் கிடையாது. பார்லிமென்டிற்கு செல்லாமல் முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நிர்வாகிகள் யூசுப் அலி, செய்யது அலி, நேஷனல் சாகுல், ரோஷன் உட்பட பலரும் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக