கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 8 பிப்ரவரி, 2012

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள்





கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அமைச்சர்கள் லட்சுமண் சவதி, கிருஷ்ணபாலேமர் மற்றும் சி.சி.பாட்டீல் தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சதானந்த கவுடாவிடம் வழங்கியுள்ளனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. சிந்தகி தாலுகாவில் பாகிஸ்தான் கொடியேற்றப்பட்டது தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசிக் கொண்டிருந் தார். அப்போது, கூட்டுறவு அமைச்சர் லட்சுமண் சவதி செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

 அருகில் இருந்த பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல், சவதி என்ன பார்க்கிறார் என்று எட்டிப் பார்த்தார். செல்போன் காட்சிகளை அவரும் பார்த்தார். பேரவை நிகழ்ச்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்த டிவி கேமராவில் அமைச்சர் பார்ப்பதை ‘ஜூம்’ செய்தபோது இருவரும் ஆபாச படம் பார்த்தது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த செய்தி வெளியானதும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மஜத தலைவர் குமாரசாமி ஆகியோர், அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். 

மேலும், ‘‘பேரவை நிகழ்ச்சியின்போது எனது செல்போனு க்கு ஒரு எம்எம்எஸ் வந்தது. அது என்ன என்று பார்த்தேன். வெளிநாட்டில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. நான் ஆபாச காட்சி எதையும் பார்க்கவில்லை. எனவே, ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை’’ என அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். 

இதனையடுத்து ஆபாச படங்களை பார்த்த அமைச்சர்களை பதவி விலக வேண்டும் என கட்சி அவரசக் கூட்டத்தில் மடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர்கள் லட்சுமண் சவதி, கிருஷ்ணபாலேமர் மற்றும் சி.சி.பாட்டீல் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சதானந்த கவுடாவிடம் வழங்கினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக