கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 4 பிப்ரவரி, 2012

திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு


திருச்சி அல்லித்துறை புதுதெருவைச் சேர்ந்தவர் மனோகர். இவருடைய மனைவி கோமதி. கூலி வேலை செய்து வரும் இவர் 4 ஆடுகளையும் அருகில் உள்ள வயல்காட்டில் மேய்த்து வந்தார்.


 
இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் சினையாக இருந்த ஒரு ஆடு 2 குட்டிகளை ஈன்றது. அதில் ஒன்று கறுப்பு நிறமாகவும், மற்றொன்று “பிரவுன்” நிறமாகவும் இருந்தன. “பிரவுன்” நிறத்தில் உள்ள ஆட்டுக்குட்டி முகம் வினோதமாக இருந்தது. அதனுடைய ஒரு கண் வெள்ளை நிறத்திலும், மற்றொரு கண் நீல நிறத்திலும் உருளை வடிவில் இருந்தன. காதுகள் 2-ம் மிக நீளமாக இருந்தன.
 
இந்த வினோத ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து கிராமத்தில் ஒரு ஆடு மனித முகம், கை, கால் போன்ற வடிவில் ஒரு குட்டியை ஈன்றது.
 
 மெல்லிய தோலுடன் பிறந்த அந்த அதிசய ஆட்டு குட்டி சிறிது நேரத்தில் இறந்தது. ஆனால் அல்லித்துறையில் பிறந்த இந்த வினோத ஆட்டு குட்டி நல்ல நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக