அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பள்ளிகளுக்கு புரொஜெக்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கடையநல்லூர் வட்டார வளமையம் மூலம் மக்கள் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராம கல்விக் குழு உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் ஒன்றியத் தலைவர் பானுமதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பெரியதுரை முன்னிலை வகித்தார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் அப்துல் கபார்கான் வரவேற்றார். இதில் சிதம்பராப்பேரி, துரைச்சாமியாபுரம் ஆகிய பள்ளிகளுக்கு புரொஜெக்டர்களை ஒன்றியத் தலைவர் வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை துணைத் தலைவர் பெரியதுரை வழங்கினார்.
இதில் நகர்மன்ற உறுப்பினர் ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கரவடிவு, இக்பால், ஜன்னத், ஜெயலட்சுமி, சம்ருத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக