கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 15 பிப்ரவரி, 2012

தென்காசி-நெல்லை ரயில் பணி தீவிரம்

தென்காசி-நெல்லை அகல ரயில் பாதையில் ஜல்லி கற்கள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்தது.தென்காசி-நெல்லை அகல ரயில் பாதை பணிகள் 90 சதவீதத்திற்கு மேல் முடிந்து விட்டது. இந்த வழித்தடத்தில் இரண்டு பெரிய பாலங்கள் மற்றும் 20 சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே முதன்மை தணிக்கை அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் மோட்டார் டிராலியில் தென்காசி-நெல்லை அகல ரயில் பாதையில் சென்று ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து இப்பாதையில் தேவைப்படும் இடங்களில் ஜல்லி கற்கள் நிரப்பும் பணி நேற்று நடந்தது. தென்காசி-பாவூர்சத்திரம் இடையே அகல ரயில் பாதையில் சரக்கு ரயில் மூலம் ஜல்லி கற்கள் தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. ரயில்வே தண்டவாளத்தின் உறுதி தன்மையை வலுப்படுத்தும் வகையில் ஜல்லி கற்கள் போடப்பட்டன. இப்பணிகள் முழுமை பெற்றதும் வரும் 21ம் தேதி தென்னக ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தென்காசி-நெல்லை அகல ரயில் பாதையில் ஆய்வு பணியை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக