கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

ஃபேஸ்புக்கும், டிவிட்டரில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு புதிய வசதி


சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கும், டிவிட்டரும் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு புதிய வசதியை ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறது. அந்த அளவுக்கு தொழில் நுட்பங்களின் மூலம் அதிக வசதிகளை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது சோஷியல் மீடியா.
முன்பெல்லாம் வேலை தேட வேண்டும் என்றால் பல வலைத்தளங்களில் பதிவு செய்து, அதற்கு என்று தனி நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும். இப்பொழுது அந்த நேரத்தினை மிச்சம் செய்ய முடிவெடுத்துள்ளது ஃபேஸ்புக்கும், டிவிட்டரும்.
இதற்கு சிறந்த உதாரணத்தை வழங்க வேண்டும் என்றால் லிங்க்டுஇன் பற்றி அனைவருக்கும் தெரியும். இதுவும் ஒரு சோஷியல் மீடியா தான். இதில் உள்ள ப்ரொஃபைல் தகவல்கள் பல வேலைவாய்ப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்பை பெறுவது சுலபமாகிறது. இது போன்ற வசதியை ஃபேஸ்புக்கும், டிவிட்டரும் கொடுக்க இருக்கிறது.
இந்த வசதியினை அமெரிக்காவை சேர்ந்த ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் மூலம் அமெரிக்காவில் 1 கோடியே 84 லட்சம் பேரும், டிவிட்டர் மூலம் 80 லட்சம் பேரும் மற்றும் லின்க்டுஇன் மூலம் 1 கோடியே 2 லட்சம் பேரும் வேலை வாய்ப்பை பெற்றிருக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்த வசதியினால் நண்பர்களின் ப்ரொஃபைலை பரிந்துரை செய்யவும் முடியும். இதை ஜாப் ரெஃப்ரல் என்றும் கூறலாம். இது போன்று எளிதாக வேலை வாய்ப்பினை கொடுக்க சமூக வலைத்தளங்களும் புதிய யோசனைகளுடன் முன் வருகின்றன.

சிறிய வேண்டுகோள் 
வலைத் தளங்களை பயனுள்ளதாக பயன்படுத்துங்கள் நமக்காக இல்லாவிட்டாலும்  மற்றவர்களுக்கு பயனுள்ளதாக பயன்படுத்துங்கள்  கண்டுபிடிப்புகளும் கணினியும் நம் முன்னேறத்திற்கான வழிகளே தவிர அனாச்சாரியதிர்காக அல்ல  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக