எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிப்பு: பள்ளி மாணவன் முகம்மது ஹம்தான். சாதனை
எலுமிச்சம்பழத்தில் இருந்த மின்சாரம் தயாரித்து தென்காசி பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளான். அதுபற்றிய விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் காதர் முகைதீன். இவரது மனைவி ஷமீமா. இவர்களது மகன் முகம்மது ஹம்தான். இவன் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறான். அவன் எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக் கலாம் என்பதை கண்டு பிடித்துள்ளான்.
இதனை நேற்று பலரின் முன்னிலையில் செய்து காண்பித்தான். எலுமிச்சம் பழத்தின் ஒருபுறம் இரும்பு ஆணியையும், மறுபுறம் செம்பு கம்பியையும் சொருகினான். இதேபோல் 4 எலுமிச் சம்பழங்களில் ஆணி மற்றும் செம்புகம்பிகளை சொருகி அவை அனைத்தையும் வயர்மூலம் இணைப்பு கொடுத்தான். அந்த வயரில் 2வாட்ஸ் பல்பை இணைத்தான். அப்போது அந்த பல்ப் ஒளிர்ந்தது. தனது புதிய கண்டுபிடிப்பு குறித்து மாணவன் முகம்மது ஹம்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது தந்தை காதர் முகை தீன் மெக்கானிக்கல் என்ஜி னீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். ஆகவே நாங்கள் அங்கு வசித்துவந்தோம். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன்.
எனக்கு புதுவழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம்பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதி லிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம்பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பி களால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது.
இதனை மேலும் ஆராய்ச்சி செய்து அதிக பழங்களை வைத்து நவீனமுறையில்இந்த திட்டத்தை செயல்படுத்தினால் மின்சாரம் தேவைக்கேற்ப எடுக்கமுடியும் எனநம்புகிறேன். இதேபோன்று ஆரஞ்சுபழம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் ஆகியவற்றிலும் இருந்து மின்சாரம் எடுக்க முடியும். இவ்வாறு மாணவன் முகம் மதுஹம்தான் கூறினான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக