கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 16 பிப்ரவரி, 2012

தமிழகத்தில் மின் வெட்டு தீர்க்கப்பட வேண்டும் எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்

தமிழகத்தில் மின் வெட்டை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.எஸ்.டி.பி.ஐ நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. மாவட்ட தலைவர் சாகுல் அமீது உஸ்மானி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் சிந்தா வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது, பொருளாளர் சாகுல் அமீது முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் தெஹ்லான் பாகவி பேசினார்.

சங்கரன்கோவிலில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்திற்கான பின்னணி குறித்து அரசு கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின் வெட்டை விட அதிகமான மின் வெட்டு நிலவுகிறது. தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்தும், தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் மின்சாரத்தை பெற்று மின்வெட்டை தீர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட செயலாளர் ஹபீப் ரகுமான் நன்றி கூறினார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக