கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் மோதல் சம்பவத்துக்கு முஸ்லிம் லீக், தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்


சங்கரன்கோவில் மோதல் சம்பவத்துக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.


 இது தொடர்பாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் மாநில அமைப்புச் செயலர் எஸ். அப்துல் கபூர் வெளியிட்டுள்ள அறிக்கை:
 சங்கரன்கோவிலில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ் மாநில முஸ்லிம் லீக் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடவுள்ளோம்.


 அதனை சீர்குலைக்கும் வகையில் சிலர் இந்த கலவரத்தை திட்டமிட்டு செய்துள்ளனர். இந்த கலவரத்தால் இஸ்லாமியர்களுக்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடியும்வரை சிறுபான்மையினருக்கு காவல் துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.


 இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலர் எஸ். ஷேக் அப்துல் கபூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: சங்கரன்கோவில் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இஸ்லாமியர்களின் சொத்து ரூ.80 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக