கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 17 ஜனவரி, 2012

கடையநல்லூர் பகுதியில் திமுக.,கொடியேற்று விழா


கடையநல்லூர் பகுதியில் பொங்கலை முன்னிட்டு திமுக சார்பில் கொடியேற்று விழா நடந்தது.

கடையநல்லூர் ஒன்றிய திமுக சார்பில் நடந்த கொடியேற்று விழாவில் கொடிக்குறிச்சி, சிவராமபேட்டை, நெடுவயல், வேலாயுதபுரம், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், சிங்கிலிபட்டி, ரெட்டைக்குளம், பொய்கை, கோவிலாண்டனூர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் திமுக கொடியேற்றப்பட்டது. கொடியை ஒன்றிய செயலாளர் காசிதர்மம் துரை ஏற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் சேதுநாயக்கர், துணை செயலாளர்கள் கருப்பசாமி, பால்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் தங்கமணி, செல்வராஜ், கருப்பணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சொக்கம்பட்டி செல்லத்துரை, பிள்ளையார், ரத்தினம், ஊர்மேலழகியான் முத்துவேல், சுப்பிரமணியன், குலசேகரன், ஒன்றிய கவுன்சிலர் குமார், பிரகாஷ், நகராட்சி கவுன்சிலர் முத்துக்குமார் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக