கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 21 ஜனவரி, 2012

ஆழ்வார்குறிச்சியில் கருணாநிதி ஆவுடையப்பன் படங்கள் அவமதிப்பு

ஆழ்வார்குறிச்சியில் திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் படங்கள் அவமதிப்பு செய்யப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆழ்வார்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எதிரே முன்னாள் டவுன் பஞ்., தலைவர் பொன்ஸ் வீடும், காம்ப்ளக்சும் உள்ளது. மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த காம்ப்ளக்ஸின் சுவற்றில் நகர திமுக சார்பில் பொன்ஸ், நகர செயலாளர் பாண்டாரம், ஒன்றிய செயலாளர் குமார், நகர இளைஞரணி செயலாளர் அல்லாபிச்சை சார்பில் பெரிய அளவிலான கருணாநிதி படமும், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் படமும் பெயிண்டினால் வரையப்பட்டு இருந்தது.நேற்று காலை பொன்ஸ் வீட்டிலிருந்து வாசலுக்கு வந்தபோது கருணாநிதி மற்றும் ஆவுடையப்பன் படங்களின் மேல் தார் பூசப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டிருந்தது. 

உடனடியாக கடையம் ஒன்றிய செயலாளர் குமார், ஆழ்வார்குறிச்சி நகர செயலாளர் பண்டாரம், முன்னாள் டவுன் பஞ்., தலைவர் பொன்ஸ், நகர இளைஞரணி செயலாளர் அல்லாபிச்சை, முன்னாள் கவுன்சிலர்கள் கண்மணி, சிவராமன், வாகைக்குளம் சண்முகவேல், கோதர்ஷாஅலி, ஆர்.எஸ்.பாண்டியன், குறிஞ்சி சுரேஷ், பரும்பு அரி, சுதாகரன், பாஸ்கர், திவான்பாதுஷா, செல்வம், முத்தையா, சிவசுப்பிரமணியன், அழகேசன் உட்பட திமுகவினர் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் திமுக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் கூட்டம் நடத்தினர். தொடர்ந்து ஆழ்வார்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் முன்னாள் டவுன் பஞ்., தலைவர் பொன்ஸ் மற்றும் நகர செயலாளர் பண்டாரம் ஆகியோர் அவமதிப்பு செய்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் செய்தனர். இச்சம்பவம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக