கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 18 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு எதிரொலி பழிக்கு பழியாக கூலிப்படை வாலிபர் கொலை

நெல்லை அருகே பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிவாங்கும் வகையில் கூலிப்படை வாலிபர் கொலை செய்யப்பட்டதாக "திடுக்' தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.நெல்லை அருகே ராஜவல்லிபுரம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ்(30). நேற்றுமுன்தினம் இவர் ரோட்டில் ரோட்டில் நடந்து சென்ற போது சிலர் கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.சம்பவ இடத்தில் டி.ஐ.ஜி., வரதராஜூ, எஸ்.பி., விஜயேந்திர பிதரி விசாரணை நடத்தினர். தாழையூத்து டி.எஸ்.பி., கனகராஜ், இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர்.கொலை செய்யப்பட்ட ஸ்டீபன்ராஜ் கூலிப்படையை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவர் மீது பாளையஞ்செட்டிக்குளத்தை சேர்ந்தவர் சென்னையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, முத்தையாபுரத்தில் ஒரு கொலை வழக்கு, பாளை. யில் கொலை முயற்சி வழக்கு, உள்ளூரில் ஒரு கொலை வழக்கு இருப்பது தெரியவந்தது.

இருவர் சரண்
ஸ்டீபன்ராஜ் கொலை தொடர்பாக காட்டாம்புளியை சேர்ந்த ஆனந்தம் மகன் நிர்மல், ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் ரூபன் நேற்று ராஜவல்லிபுரம் வி.ஏ.ஓ.,விடம் சரண் அடைந்தனர். சரண் அடைந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க திட்டமிட்டு ஸ்டீபன்ராஜை தீர்த்துக்கட்டியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இதுதொடர்பாக பாலாமடையை சேர்ந்த விஜி என்ற விஜயராகவன், குட்டி, கணேசன், கீழப்பாட்டத்தை சேர்ந்த சுப்பையா, மேல பாலாமடையை சேர்ந்த மணிமாறன், ராஜவல்லிபுரத்தை சேர்ந்த முருகன் என்ற வண்டுமுருகன், செண்பராஜ், ஐசக், ரகுலனை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களில் சிலர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். விசாரணைக்கு பின் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பசுபதிபாண்டியன் கொலை எதிரொலியாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுபஸ்கள் மீது கல்வீச்சு, ஆட்டோ எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகிறது. இக்கொலைக்கு பழிவாங்கும் வகையில் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக