கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

சுழற்கழகம் சார்பில் 1,11,111 மரக்கன்றுகள் நடும் பணி நிறைவு


சுழற்கழக பசுமைப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1,11,111 மரக்கன்றுகள் நடும் பணி நிறைவு பெற்று விட்டதாக சுழற்கழக பசுமைப் பாதுகாப்பு திட்டத்தின் தலைவரும், சுழற்கழகத் துணை ஆளுநருமான புளியங்குடி பி.எஸ்.சங்கரநாராயணன் தெரிவித்தார்.

 சுழற்கழக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் உரிய முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை புதன்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் பல்வேறு அமைப்புக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. சுழற்கழகம் சார்பிலும் இதற்கென ஒரு திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


 இதன்படி,சுழற்கழக மாவட்டத்தைப் பசுமையான மாவட்டமாக உருவாக்கும் முயற்சியாக கடந்த முறை பசுமைப் பாதுகாப்பு திட்டம் மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் 1,11,111 மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டம் 11-11-2011 அன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் கல்வி நிறுவனங்கள்,மருத்துவமனைகள்,நீதிமன்ற வளாகங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன என்றார் சங்கரநாராயணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக