கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 13 ஜனவரி, 2012

கடையநல்லூர் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு கருத்தரங்கம்


கடையநல்லூர் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.


தலைமையாசிரியர் ஆயிஷாள்பீவி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு,ஆசிரியர் ராமசாமி முன்னிலை வகித்தார்.மாணவர்களின் கேள்விகளுக்கு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி முதல்வர் நாராயணன் விளக்கமளித்தார்.  தொடர்ந்து மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த தேர்வு நடைபெற்றது. சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதில் ஆசிரியர்கள் மோசஸ்தர்மா, முகைதீன், மகபூப்,ஜெபராஜ்,கலீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக