குற்றாலம் நகரப்பஞ்சாயத்து கூட்டம், தலைவர் லதா அசோக்பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் குற்றாலம் அருவிகளில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டு, சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கும்போது சோப்பு மற்றும் ஷாம்பூக்களை பயன்படுத்த தடை விதிப்பது. என தீர்மானிக்கப்பட்டது.
இந்த தடை அடுத்த மாதம் (பிப்ரவரி மாதம்) 1-ந்தேதி முதல் இந்த தடையை அமலுக்கு வருகிறது. தடையை மீறி சோப்பு-ஷாம்பூக்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அருவிகள் அருகே உள்ள கடைகளில் இவற்றை விற்பனை செய்வதை தடை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
குற்றாலம் மெயின் அருவி தடாகத்தின் அருகில் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் தடைவிதிப்பது. அதற்கு மாற்று ஏற்பாடாக கோவிலுக்கு செல்லும் பாலத்தின் அருகில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிப்பதற்கு ஏற்பாடு செய்வது. எனவும் முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக