கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

புளியங்குடி அருகே பைக் மரத்தில் மோதி வாலிபர் பலி


புளியங்குடி அருகே பைக் மரத்தில் மோதி வாலிபர் பலியானார்.

புளியங்குடி பாலவிநாயகர்கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் இசக்கி மகன் தவுட்டுராஜா (22). இவர் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரும், இவருடைய நண்பரும் பைக்கில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக் புளியங்குடியை அடுத்த புன்னையாபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி எதிரே இருந்த புளியமரத்தின் மீது பலமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த தவுட்டுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் புளியங்குடி டி.எஸ்.பி.ஜமீம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக