பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செந்தூர் எக்ஸ்பிரசில் கூடுதலாக ரெயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னைஎழும்பூர்- திருச்செந்தூர், திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸில்(ரெயில் எண்-16735,16736) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூங்கும்வசதி கொண்ட 4பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து நேற்று(13-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை 4கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல் திருச்செந்தூரில் இருந்து இந்தரெயிலில் இன்று (14-ந்தேதி) முதல் 18-ந்தேதி வரை 4பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கும். நெல்லை-பிலாஸ்பூர் வாராந்திரரெயிலில் 2தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு திரீ டயர் குளிர்சாதனபெட்டி இணைக்கப்படும்.
நெல்லையில் இருந்து வருகிற 29-ந்தேதி கூடுதல்பெட்டிகளுடன் இந்த ரெயில் புறப்பட்டு செல்லும். பிலாஸ்பூரில் வருகிற 31-ந்தேதி புறப்படும்போது கூடுதல்பெட்டி இணைப்பு இருக்கும். அதேபோல் நெல்லை-ஹபா வாராந்திர ரெயிலிலும் தூங்கும்வசதி கொண்ட ஒருபெட்டி நிரந்தரமாக இணைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக