கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

புளியங்குடி அருகே 3 மாடுகள் மர்ம சாவு


புளியங்குடி அருகே மேய்ந்து கொண்டிருந்த 3 எருமை மாடுகள் திடீரென இறந்தது.

புளியங்குடி முப்புடாதிஅம்மன் கோவில் 4ம் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (65). இவர் தனக்கு சொந்தமான கால்நடைகளை வளர்த்து பரமாரித்து வருகிறார். மேலும் காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு மீண்டும் மாலையில் வீடு திரும்புவது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம்போல் காலையில் மாடுகளை மேச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தபோது திடீரென ஆங்காங்கே நின்றவாறு மூன்று மாடுகள் வாயில் நுரை தள்ளியவாறு கிழே விழுந்து இறந்தன.

இதனை சற்றும் எதிர்பாராத பரமசிவன் கடும் மனவேதனை அடைந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக