கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 23 ஜனவரி, 2012

ஓடிப் போய் திருமணம் செய்தல்


அஸ்ஸலாமு அலைக்கும் 



ஓடிப் போய் திருமணம் செய்தல்

ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்வது எமதூரில் வருடத்தில் ஒன்றாவது வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. அதே போல் பௌதீக சமூக சூழ் நிலைகளால் சிற் சில ஓடிப்போகும முடிவுகள் தடைப்பட்டிருக்கின்றன. நான் அறிந்த வகையில் 1960 களில் இருந்து இவ்வாறான ஓடிப்போதல், மாற்று மத இளைஞர்களுடன் ஓடிப்போதல் மற்றும் கள்ளத் தொடர்பு வைத்தல் நண்பர் நண்பிகள் ‘செட்’ பண்ணி ஒன்று கூடலுக்கான ஏற்பாடுகளைச் செய்தல் இவ்விடயத்தில் சில குடும்ப அங்கத்தவர்கள் கூட ஒத்துழைப்பதானது மனவேதனைக்குரிய-வெட்கித் தலை குணிய வேண்டிய விடயமாகும.
சினிமா-நாடகம் மற்றும் முன்னேறிவரும் தொழிநுட்பங்களை கட்டுப்படுத்துவதோ தடைசெய்வதோ முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில் இவ்வாறான சமூகச் சீர்கேடுகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதை சமூக நலன் விரும்பிகள் மட்டுமல்ல மண்ணை மதிக்கும் அனைத்துள்ளங்களும் சவாலாக எடுக்க வேண்டிய ஓர் விடயமாகும்.
இதில் மன வேதனை என்னவென்றால் ஊர், குடும்பம், மார்க்கம் எல்லாவற்றையும் சொற்ப ஆசைக்காக விட்டெறிந்து போகும் இவர்கள் அவர்களது ‘அத்தியவசியத் தேவைகள்’ அனைத்தும் முடிந்ததும் புற முதுகு காட்டிச் சென்றதை மறந்து மீண்டும் மண்ணை மிதித்து ஊரோடும் குடும்பத்தோடும் நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம் என்பதை உயிர்ப்பிக்கத்துடிப்பதுதான். (ஒரு காலத்தில் உங்கள் பிள்ளைக்கு திருமணம் ஏற்பாடு செய்யும் போது… ‘இது ஓடிப்போனவர்களின் பிள்ளைதானே, இதுவும் அப்படித்தான் இருக்கும்’ என்று உங்கள் எதிர்கால சந்ததிகளுக்கு சமூகத்தால் சூட்டப்படப்போகும் அவப் பெயரை உங்களால் மறைக்க முடியாமல் போகும் நிலைமையை எண்ணிப்பாருங்கள்).
கடந்த 3 வருடங்களில் நடந்த ஓடிப்போனவர்களின் பெற்றோர்களைச் சந்தித்த போது அவர்களால் வாய் விட்டு அழுவதைத் தவிர வேறெந்த பதில்களும் அவர்களிடத்திலிருந்து வரவில்லையென்பதும் அவர்களிடமிருந்து வந்த ஒரே ஒரு பதில்களில் ‘தற்கொலை ஆகுமாக்கப்பட்டிருந்தால்…..’ எனும் பதில் மற்றுமொரு மனக் கசப்பான இதயம் அழக்கூடிய விடயமாகவும் இருந்தன என்பதை இந்நேரத்தில் சுட்டிகக ;காட்டக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த தாய் வளர்த்தெடுத்து அறிவைப்போதித்த தந்தை மற்றும் உறவினர்கள் அனைத்தையும் துறந்து ஓர் சொற்ப ஆசைக்காக ஏன் இவர்கள் ஓட வேண்டும் என்பது புரியாத புதிர். உங்களுக்குத் திருமணம் முடித்துத் தருவது உங்களைப் பெற்றெடுத்த அன்புப் பெற்றோர்களுக்குக் கட்டாய கடமையாக இருக்கையில் ஏன் இவ்வாறான முடிவை இளைஞர்கள் எடுக்கின்றார்கள் என்பது மற்றுமொரு கேள்வியாகவிருக்கின்றது.
ஊரை விட்டு ஓடிப்போனவர்கள் மீண்டும் ஏன் ஊர் வர வேண்டும்? அவர்களுக்கு சமுதாயம் கொடுக்கும் அந்தஸ்து, கௌரவம் என்ன?? அல்லது தண்டனை என்ன??? இவர்கள் ஒதுக்கப்பட வேண்டுமா அல்லது வரவேற்கப்பட வேண்டுமா???? என்பதை இக்குழுமத்திலுள்ள கன்னியமிக்க உலமாக்கள், கல்விமான்கள், பொது நிறுவனங்கள், சமூகப் பற்றுள்ள இளைஞர்கள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். இது எந்தவொரு தனி நபரைச் சாடவோ அல்லது  அவரது குடும்பத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தவோ இக் கருத்தை நான் முன்வைக்கவில்லை என்பதை அல்லாஹ்வுக்குப் பயந்து கூறிக்கொள்வதோடு வழமான கடையநல்லூர் நாளைய சவாலை எவ்வாறு சந்திக்கப் போகின்றது என்பதை கொஞ்சமாவது சிந்தித்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.
நன்றி
என்றும் அன்புடன்
கடையநல்லூர் உஸ்மான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக