கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 13 ஜனவரி, 2012

நெல்லையில் பஸ்சில் இருந்து விழுந்து ஒருவர் பலி

நெல்லையில் பஸ்சில் இருந்து விழுந்து ஒருவர் இறந்தார். மேலப்பாளையம் செய்யது இஸ்மாயில் தங்கல் தைக்கா தெருவை சேர்ந்தவர் அபுஅகமது(54). இவர் நேற்று வி.எஸ்.டி., பள்ளிவாசல் அருகே பஸ்சில் ஏறினார். அப்போது தடுமாறி அவர் கீழே விழுந்தார். தலையில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அபுஅகமது இறந்தார். விபத்து குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக