கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 14 ஜனவரி, 2012

தென்காசி பழைய பஸ்ஸ்டாண்ட் சீரமைக்கப்பட வேண்டும்

தென்காசி பழைய பஸ்ஸ்டாண்ட் சீரமைக்கப்பட வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசியில் பழைய பஸ்ஸ்டாண்ட், புதிய பஸ்ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. மேலும் ரயில்வே மேம்பால பணி நடப்பதால் ரதவீதியில் டவுன் பஸ் தற்காலிக பஸ்ஸ்டாண்டும் செயல்பட்டு வருகிறது. பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து நெல்லை, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், தூத்துக்குடி, நாகர்கோவில், பாபநாசம், மதுரை, ராஜபாளையம், புளியங்குடி, சங்கரன்கோவில், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரூட் பஸ்களும், வடகரை, மேக்கரை, பண்பொழி, அச்சன்புதூர், கடையநல்லூர், புளியங்குடி, சுரண்டை பகுதிக்கு செல்லும் டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

மேலும் வாடகை கார், வேன், ஆட்டோகளும் பழைய பஸ்ஸ்டாண்டில் நிறுத்தப்படுகிறது. இதனால் எப்போதும் இங்கு வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். பயணிகள் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. மழை நேரங்களில் இதில் தண்ணீர் தேங்கி சிறு சிறு குட்டைகளாக காட்சி அளிக்கும். இவ்வழியே பஸ்கள் செல்லும் போது பயணிகள் மீது மழைநீர் அபிஷேகம் நடப்பது வாடிக்கையாகி விட்டது. மேலும் தேங்கி கிடக்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

பயணிகள் கவனம் சிறிது குறைந்தாலும் குண்டு, குழிகளில் தடுக்கி விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. விபத்தை தவிர்க்க பழைய பஸ்ஸ்டாண்ட் உட் பகுதியில் சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக