சிவராமப்பேட்டை - பண்பொழி - செங்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருமலைக்கோயிலுக்கு செல்லக்கூடிய தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகளும், பக்தர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடையநல்லூர் தொகுதியில் அமைந்துள்ள சாலைகள் அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்களுக்கு சுற்றுலா ஸ்தலமாக விளங்க கூடிய அடவிநயினார் அணைக்கட்டு மற்றும் பிரசித்தி பெற்று விளங்கும் திருமலைக்கோயில் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் குத்துக்கல்வலசை-பண்பொழி திருமலைக்கோயில் சாலை அகலப்படுத்தும் பணியை நடந்தது. தொடர்ந்து சிவராமப்பேட்டை - பண்பொழி - செங்கோட்டை சாலைகளும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பண்பொழி - வடகரை வரையிலான சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடையநல்லூர், குத்துக்கல்வலசை, செங்கோட்டை ஆகிய பகுதிகள் வழியாக திருலைக்கோயிலுக்கு செல்லும் சாலைகளும் அகலப்படுத்தப்பட்டுவிட்டதால் பொதுமக்களும், பயணிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் காசிதர்மத்தில் இருந்து அச்சன்புதூர் வரையிலான சுமார் 2 கி.மீ. சாலைகள் தற்போது அகலப்படுத்தப்படாமல் இருந்து வரும் நிலையில் இதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டுமென பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக