கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 9 ஜனவரி, 2012

கடையநல்லூர் யூனியனில் பசுமை வீடு திட்டத்தில் 107 வீடுகள்


கடையநல்லூர் யூனியனில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 107 வீடுகள் கட்டப்படவுள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 2 ஆயிரத்து 427 பசுமை வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடையநல்லூர் யூனியனில் 107 பசுமை வீடுகள் கட்டப்படவுள்ளன. ஆனைகுளத்தில் 5 வீடுகளும், போகநல்லூர் 7, சொக்கம்பட்டி 9, இடைகால் 4, கம்பனேரி 6, காசிதர்மம் 6, கொடிக்குறிச்சி 7, குலையநேரி 7, நயினாரகரம் 10, நெடுவயல் 7, பொய்கை 11, புதுக்குடி 5, புன்னையாபுரம் 7, திரிகூடபுரம் 7, ஊர்மேலழகியான் 5, வேலாயுதபுரம் 4 ஆக மொத்தம் 107 பசுமை வீடுகள் கட்டுவதற்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக கடையநல்லூர் யூனியனில் 51 வீடுகள் பஞ்., பகுதிகளில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக யூனியன் பிடிஓ பழனி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக