உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தற்போது இங்கு பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
பாரதீய ஜனதா தலைவர்கள் மாநிலம் முழுவதிலும் சென்று தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளரும், கட்சியின் தேசிய செயலாளருமான தவார்சந்த் கெலாட் டேராடூனில் நடந்த கூட்டத்தில் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர், ‘’இந்துக்கள் புனிதமாக கருதும் விலங்கு பசு. உத்தரகாண்டில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் பசுவின் சிறுநீரை அதிக அளவில் சேகரித்து அதில் இருந்து பல்வேறு மருந்துகள் தயாரிப் போம். பசுவை வளர்க்க சிறப்பு திட்டங்கள்தீட்டப்படும். பசு சிறுநீரில் இருந்து 'ஆர்க்' என்ற ஜூஸ் தயாரித்து அதை புற்று நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பசு சிறுநீரில் இருந்து காது, கண் நோய்களுக்கான மருந்து தயாரிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். |
ஏற்கனவே பசு சிறுநீர் விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பசுக்களை அதிக அளவில் வளர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக