கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. ஆண்டுதோறும் ஜனவரி 1 முதல் 7ம் தேதி வரை சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது. இதன்படி தமிழக அரசு போக்குவரத்து துறை தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகமும், கடையநல்லூர் எவரெஸ்ட் கல்லூரியும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு தென்காசி வட்டார போக்குவரத்து அதிகாரி ராஜசேகரன் தலைமை வகித்து மாணவர்களுக்கு போக்குவரத்து சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்முறையுடன் சாலை பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து போக்குவரத்து துறை முதல்நிலை போக்குவரத்து ஆய்வாளர் வேங்கடகிருஷ்ணன், சாலை வகைகள், சாலைகளில் செல்வது பற்றியும், சிக்னல்கள் பற்றியும் விளக்கி பேசினார்.
இரண்டாம் நிலை போக்குவரத்து ஆய்வாளர் செண்பகவல்லி நான்கு வழிச்சாலைகளில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வது பற்றி கூறினார். நிகழ்ச்சிக்கு எவரெஸ்ட் கல்லூரி தாளாளர் முகைதீன் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். கல்லூரி நிர்வாக அதிகாரி செய்யதுஅலி, பயிற்சி அதிகாரி செண்பகராஜன் வாழ்த்தி பேசினர்.முதல்வர் லட்சுமணன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக