கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 18 ஜனவரி, 2012

தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம்

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம் நடந்தது.மாநில பேச்சாளர் மஸ்வூத் யூசுபி தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் அப்துர்ரஹ்மான் பிர்தவுசி பேசும்போது, ""இஸ்லாத்தின் அடிப்படை திருக்குர்ஆனும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலும் மட்டுமே. நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலின்படி முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து காரியங்களை செயல்படுத்த வேண்டும். நபிகள் நாயகம் இறைவனின் இறுதிதூதர். அவருக்கு பின்னால் இறைவனிடம் இருந்து யாருக்கும் இறைச்செய்தி வராது என்ற நம்பிக்கையை முஸ்லிம்கள் மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, மாவட்ட செயலாளர் செய்யதுஅலி, நகரத்தலைவர் ரோஷன், செயலாளர் சிராஜ், பொருளாளர் முகமதுநிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக