கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 18 ஜனவரி, 2012

கடையநல்லூர் நகர, ஒன்றிய, தொகுதிக் கழக அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூர் நகர, ஒன்றிய, தொகுதிக் கழக அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

படங்களுடன் 




திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.


கடையநல்லூர் நகர, ஒன்றிய, தொகுதிக் கழக அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.



கடையநல்லூர் நகரச் செயலர் கிட்டுராஜா தலைமை வகித்தார்.
 தொகுதிச் செயலர் பொய்கை மாரியப்பன், ஒன்றியச் செயலர் வசந்தம் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர்.


 அச்சன்புதூர்:  அச்சன்புதூர் தைக்கா பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் மருத்துவர் சுசீகரன் தலைமை வகித்தார். செங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலர் அயூப், நகரச் செயலர் பரமசிவன், நிர்வாகிகள் சிந்தாமதார், லியாகத்அலி,ஷாகுல், நாகூர், முருகன், இசக்கித்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 வள்ளியூர்:  வள்ளியூர் எம்ஜிஆர் மன்றம் சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற விழாவுக்கு ராதாபுரம் தொகுதி கழகச் செயலர் டி. பால்துரை தலைமை வகித்தார். பேரவை ஒன்றியச் செயலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  எம்ஜிஆர் மன்றச் செயலர் ப. பொன்னரசு நன்றி கூறினார்.  


வள்ளியூர் ஒன்றிய அதிமுக சார்பில் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் இ. அழகானந்தம் தலைமை வகித்தார். எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  பின்னர் கட்சித் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  ஏற்பாடுகளை நகரச் செயலர் வி.எல். தவசி முத்து செய்தார்.
சங்கரன்கோவில்:  சங்கரன்கோவிலில் நகர அதிமுக சார்பில் பஸ் நிலையம் முன் நடைபெற்ற விழாவையொட்டி எம்ஜிஆர் படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  நகரச் செயலர் கே. கண்ணன், தொகுதிச் செயலர் எஸ்.டி. சங்கரகுமார் உள்ளிட்ட திரளானோர்
பங்கேற்றனர்.


அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் எம்ஜிஆர் படத்துக்கு மாநில வீட்டுவசதி வாரியத் தலைவரும் தெற்கு மாவட்டச் செயலருமான ரெ. முருகையாபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். முருகையாபாண்டியன் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
  அம்பாசமுத்திரம் பூக்கடை பிரதான சந்திப்பில் நடைபெற்ற விழாவில் முன்னாள் எம்எல்ஏ எம். சக்திவேல்முருகன், நகர்மன்றத் தலைவி வே. செல்வி, நகரச் செயலர் என். ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கல்லிடைக்குறிச்சி: பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலர் எஸ். சங்கரநாராயணன் தலைமை வகித்தார். அண்ணா தொழிற்சங்கச் செயலர் எம்.கே.பி. அக்பர் முன்னிலை வகித்தார்.


விக்கிரமசிங்கபுரம்: டாணா, திரையரங்கு, அம்பலவாணபுரம் பகுதிகளில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலர் கே.பி.எஸ். பாண்டியன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவி இ. மனோன்மணி, துணைத் தலைவர் டி. கணேசபெருமாள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


கோபாலசமுத்திரம்: பஸ் நிலையம் அருகே நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலர் தங்கவேல் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். பேரூராட்சித் தலைவர் என். கணேசன் கட்சிக் கொடியேற்றி, மாணவ, மாணவிகள் 95 பேருக்கு புத்தகப் பைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.


 களக்காடு: களக்காடு நடுத்தெருவில் நடைபெற்ற விழாவில் எம்ஜிஆர் படத்துக்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஆ. தாணுசுப்பு மாலை அணிவித்தார்.
 புதிய பஸ் நிலையப் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
 பழைய பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்துக்கு ஒன்றியச் செயலர் இ. ஜெயராமன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.


தென்காசி:  தென்காசியில் அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலர் எஸ். முத்துக்குமார் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவி எஸ். பானு முன்னிலை வகித்தார்.  
  மேலகரத்தில் நடைபெற்ற விழாவுக்கு பேரூர் கழகச் செயலர் கார்த்திக்குமார் தலைமை வகித்தார். துணைச் செயலர் கண்ணன், ஒன்றியப் பிரதிநிதி நெல்லை முகிலன், மாவட்டப் பிரதிநிதி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 குற்றாலத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலர் வழக்குரைஞர் கே.பி. குமார்பாண்டியன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவி லதா அசோக்பாண்டியன், நகர அவைத் தலைவர் பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆலங்குளம்:  ஆலங்குளத்தில் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு நகர துணைச் செயலர் எம்.எஸ். சுப்பையா தலைமை வகித்தார்.  வழக்குரைஞர் எம்.சி. சாந்தகுமார், பேரூராட்சி வார்டு உறுப்பினர் சொரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 அதிமுக பிரமுகர் டி.ஆர்.டி. ராஜன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
சுரண்டை: சுரண்டையில் நடைபெற்ற விழாவையொட்டி சந்தை பஜாரில் உள்ள எம்ஜிஆர்  சிலைக்கு நகர இளைஞரணிச் செயலர் எம்.ஜே. ராஜா தலைமையில் நகர எம்ஜிஆர் மன்றச் செயலர் ஏ.டி. மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
 பத்தமடை: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கட்சி அலுவலகத்தில் எம்ஜிஆர் படத்துக்கு மாவட்டச் செயலர் கே. கணேஷ்குமார்ஆதித்தன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர்.


 மாவட்ட அவைத் தலைவர் துரைவேலன், துணைச் செயலர்கள் சுப்பிரமணியன், பொன்னரசு, அம்பை ஒன்றியச் செயலர் எஸ். ராஜேந்திரன், மாவட்ட மாணவரணிச் செயலர் ஐயப்பன், மகளிரணிச் செயலர் சி. பகவதி, நகரச் செயலர் கே. முத்துப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக