கன்னியாகுமரி மாவட்டம், பூத்துறையைச் சேர்ந்தவர் சாதிக். இவர் நித்திரவிளை பாலாமடம் பகுதியில் சைக்கிளில் சென்றபோது லாரி மோதி விபத்தில் சிக்கினாராம். இதில் அவரது இடதுகால் அகற்றப்பட்டதாம்.
அவருக்கு மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ரூ.1.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.ஏ. கான் நிதியுதவியை வழங்கினார். பூத்துறை முஸ்லிம் ஜமாஅத் செயலர் எஸ். முஹம்மது காமில் முன்னிலை வகித்தார். ஜமாஅத் கூட்டமைப்புப் பொருளாளர் ஆர்.எம்.எஸ். காதர், மார்க்க கல்வி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் எஸ். முஹம்மது சியாது, எம். சலீம், பி.எம். பஷீர், எம். ரஹீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக