கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

கடையநல்லூர் தொகுதியில் அடிப்படை திட்டங்களுக்கு பரிந்துரை


கடையநல்லூர் தொகுதியில் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி கட்டடம், அங்கன்வாடி கட்டடங்கள், ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை திட்டங்களுக்கு பரிந்துரை செய்திருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் அடிப்படையில் கடையநல்லூர் தொகுதியில் மக்கள் நலத்திட்ட பணிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2011-12ம் ஆண்டிற்கான எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் வகையிலும், கல்வி மேம்பாட்டிற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொகுதியில் உள்ள கம்பனேரி பஞ்., சில் சமுதாய நலக்கூடம் கட்டவும், செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 வகுப்பறை கட்டடம் கட்ட ரூ.10 லட்சமும், சாம்பவர்வடகரை டவுன் பஞ்., போலீஸ் ஸ்டேஷன் மேல்புறமுள்ள சமுதாய நலக்கூடத்திற்கு சமையல் அறை, உணவு அருந்தும் அறை, காம்பவுண்ட் சுவர் அமைத்திட ரூ.12 லட்சமும், ஆய்க்குடி டவுன் பஞ்., சாஸ்தா கோயில் தெருவில் புதிய ரேஷன் கடை, அச்சன்புதூர் பார்வதிபுரத்தில் ரேஷன் கடை, புதூர் டவுன் பஞ்.,திரவியதர்மபுரம் கிராமத்தில் ரேஷன் கடை அமைத்திட தலா ரூ.5.75 லட்சமும், செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டடம் கட்ட ரூ.10 லட்சமும், இடைகால் பஞ்.,சில் கைலாசம் நடுநிலைப்பள்ளி வடபுறம் காயிதேமில்லத் தெருவில் சிமென்ட் தளம் அமைத்திட ரூ.1 லட்சமும், சொக்கம்பட்டி பஞ்., சமுதாய நலக்கூடத்தில் உணவு அருந்தும் கூடம் ரூ.6 லட்சத்திலும், பிரானூர் வாயக்கால் பாலம் அருகே மகளிர் சுகாதார வளாகம் அமைக்க ரூ.5 லட்சமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பண்பொழி டவுன் பஞ்., கரிசல்குடியிருப்பு புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்திடவும், பொய்கை பஞ்., அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிட தலா ரூ.10 லட்சம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலத்தூர் பஞ்.,சில் அங்கன்வாடி கட்டடம், புளியரை பஞ்., பகவதிபுரம், வல்லம் ஜமீன் பஞ்., வடகரை டவுன் பஞ்., தேன்பொத்தை பஞ்.,சில் அங்கன்வாடிகள் தலா ரூ.4.60 லட்சம் செலவில் கட்டவும், போகநல்லூர் பஞ்., சுந்தரேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காம்பவுண்ட் சுவர் அமைத்திட ரூ.2 லட்சமும், ஊர்மேலழகியான் பஞ்., அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சருடன் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, நகர செயலாளர்கள் கிட்டுராஜா, தங்கவேல், செங்கோட்டை நகராட்சி சேர்மன் வக்கீல் மோகனகிருஷ்ணன், கவுன்சிலர் குட்டியப்பா, செங்கோட்டை குருசாமி உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக