கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 9 ஜனவரி, 2012

கடையநல்லூரில் சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்


கடையநல்லூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.

கடையநல்லூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பேரவை கூட்டம் கிளை தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது. ஹமீதாள் வரவேற்றார். பேரவையை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் முருகன் சிறப்புரையாற்றினார். இயக்க அறிக்கையை செயலர் சேதுராமலிங்கம், நிதி அறிக்கையை பொருளாளர் திரிபுரநாராயணன் வாசித்தனர். தீர்மானங்களை கிளை செயலாளர் முத்துசாமி முன்மொழிந்தார்.

கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அலுவலர் சங்கர், மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், அரசு ஊழியர் சங்க தென்காசி வட்டக்கிளை செயலாளர் ராதாகிருஷ்ணன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் ராமையா, ராசையா, கிளை துணை செயலாளர் இசக்கிமுத்து உட்பட பலர் பேசினர்.

கூட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிடவும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிடவும், சமையலராக பணி உயர்வு வழங்கப்படும் உதவியாளர்களுக்கு அருகில் உள்ள மையங்களில் பணி வழங்கிடவும், அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிடவும் தீர்மானத்தின் மூலம் வலிறுத்தப்பட்டது.

அச்சன்புதூர் டவுன் பஞ்.,சில் ரூ.35 லட்சத்தில் குடிநீர் திட்டம்

கடையநல்லூர் :அச்சன்புதூர் டவுன் பஞ்., பகுதியில் ரூ.35 லட்சம் செலவில் புதிய குடிநீர் திட்டம் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயார் செய்திருப்பதாக டவுன் பஞ்.,தலைவர் டாக்டர் சுசீகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அச்சன்புதூர் டவுன் பஞ்.,பகுதி மக்களுக்கு உமையன் கால்வாய் மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாகவும், டவுன் பஞ்., அலுவலகத்தில் அமைந்துள்ள குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த டவுன் பஞ்.,சினை பொறுத்தவரை சுமார் 3 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் உமையன் கால்வாய் குடிநீர் திட்டத்தில் ஏற்பட்ட உடைப்பினை சீரமைத்து புதிதாக பைப் லைன்கள் சுமார் ரூ.12 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. இந்த டவுன் பஞ்.,சில் புதிய குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படும் நிலையில் போதுமான குடிநீர் வினியோகம் மேற்கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் புதிய குடிநீர் திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

அச்சன்புதூர் அருகேயுள்ள சின்னக்காடு ஆற்றுப்படுகையிலிருந்து சுமார் 2 ஆயிரத்து 200 மீட்டர் தூரத்திற்கு பைப் லைன் மூலம் போர்வெல் தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டத்தினை மேற்கொள்ள மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.35 லட்சம் செலவில் இதற்கான மதிப்பீடு தயாரித்துள்ள நிலையில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் பரிந்துரையின்படி புதிய குடிநீர் திட்டம் அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அச்சன்புதூர் டவுன் பஞ்., பகுதியில் அமைந்துள்ள பார்வதிபுரத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.26 லட்சம் செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக