கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 18 ஜனவரி, 2012

கடையநல்லூர்:அச்சன்புதூரில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா

அச்சன்புதூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 95வது பிறந்தாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா அச்சன்புதூர் டவுன் பஞ்.,சில் கொண்டாடப்பட்டது. டவுன் பஞ்., தலைவர் டாக்டர் சுசிகரன் இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் அச்சன்புதூர் அதிமுக., நகர செயலாளர் பரமசிவன், லியாகத் அலி, செல்வமணி, இசக்கிதுரை, பாசறை சுரேஷ், நாகூர், சம்சுதின், புகாரி, ஓய்வு பெற்ற ஆசிரியர் சாகூல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து அச்சன்புதூர் பகுதியில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளை கொண்டாடும் வகையில் முக்கிய பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக