இரவு நேர காவலர்களின் பயன்பாட்டிற்காக நெல்லை மதிதா., இந்து கல்லூரி மாணவிகள் சூரிய ஒளியால் இயங்கும் பல்வகை கருவியை தயாரித்துள்ளனர்.
நெல்லை மதிதா., இந்து கல்லூரியில் இயற்பியல் துறையில் எம்.எஸ்சி., படிக்கும் மாணவிகள் எம்.மாரியம்மாள், ஏ.மாரியம்மாள் பேராசிரியர் முத்துராஜ் வழிகாட்டிதலின்படி கடந்த சில மாதங்களுக்கு முன் சூரிய ஒளியால் இயங்கும் செல்போன் சார்ஜர்களை தயாரித்தனர். சூரிய ஒளியால் இயங்கும் இந்த செல்போன் சார்ஜர், பாளை. ஐகிரவுண்ட், மேலப்பாளையம் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டது.இந்நிலையில் இரவு நேரங்களில் ஏ.டி.எம்., மையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தனிமையாக இருக்கும் செக்யூரிட்டிகள் பயன்பெறும் வகையில் சூரிய ஒளியால் இயங்கும் பல்வகை கருவி ஒன்றை மாணவிகள் எம்.மாரியம்மாள், ஏ.மாரியம்மாள் தயாரித்துள்ளனர்.இந்த கருவியில் இரண்டு எல்.இ.டி. விளக்குகள், செல்போன் சார்ஜர், எப்.எம்.ரேடியோ, எமர்ஜன்சி சைரன், கொசுவர்த்தி கருவி வைக்க பிளக் பாயின்ட் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் தனியாக காவலில் ஈடுபட்டிருக்கும் செக்யூரிட்டிகளுக்கு தேவையை கருத்தில் கொண்டு இந்த கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.கையில் எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கருவியை இரவு நேரத்தில் பயன்படுத்தி விட்டு, பகலில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இன்றைய மின்தட்டுப்பாட்டில் இந்த கருவி செக்யூரிட்டிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
இதுகுறித்து மாணவிகள் எம்.மாரியம்மாள், ஏ.மாரியம்மாள் கூறுகையில், ""கல்லூரியில் படிக்கும் போதே மக்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்க பேராசிரியர் முத்துராஜ் எங்களுக்கு ஊக்கமளித்தார். அதன் பயனாக முதல்கட்டமாக சூரிய ஒளியால் இயங்கும் அடுப்பை தயாரித்தோம். தொடர்ந்து பொதுமக்கள் பயன்படும் வகையில் சூரிய ஒளியில் இயங்கும் செல்போன் சார்ஜர்களை கண்டுபிடித்தோம். தற்போது இரவில் தனியாக பணியாற்றும் செக்யூரிட்டிகளுக்காக பல்வகை கருவியை தயாரித்துள்ளோம்.
இதில் செக்யூரிட்டிகளுக்கு தேவையான அனைத்தும் இடம்பெற்றுள்ளது. இரவில் மின்தடை ஏற்பட்டால் எ.இ.டி., விளக்குகளை போட்டுக் கொள்ளலாம். ஆபத்து ஏற்பட்டால் சைரன் ஒலி எழுப்பலாம். கொசுக்கடியில் இருந்ந்து தப்பிடிக்க கொசுவர்த்தியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் எப்.எம். ரேடியோ, செல்போன் சார்ஜர் போன்றவை இடம்பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக